காங்கிரசை கழற்றிவிடும் திமுக: குழு கூடுகிறது

காங்கிரசை கழற்றிவிடும் திமுக: குழு கூடுகிறது

2 mins read

சென்னை: தமிழக அரசியல் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே நகர்ந்துகொண்டு இருக்கிறது. எந்தெந்தக் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது தேர்தல் அறிவிப்பு வெளியான பின்புதான் தெரிய வரும். இருப் பினும் கூட்டணி குறித்த ஊகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மோடி திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் கடுமையான போராட்டங்களை நடத்திய திமுக அண்மைக் காலமாக பிரதமர் மோடி பற்றியோ மத்திய அரசைப் பற்றியோ எதிர்க் கருத்துகள் வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறது.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக=பாஜக கட்சிகளிடம் நெருக்கம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கூட்டணி அமைய டிடிவி தினகரன் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிகிறது. இரு நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட் டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்க ளவை துணை சபாநாயகர் தம்பிதுரை இதே கருத்தை வெளியிட்டார். "காங்கிரசோடு கூட்டணி அமைத்திருக் கும் திமுக, ராகுல் காந்திதான் பிரதமர் என்று சொல்ல மறுக்கிறது. கூட்டணி குறித்து பின்னர் முடிவெடுப்போம் என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். பாஜகவுடன் கூட்டு சேரப்போகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். திமுகவினர் மறைமுகமாக பாஜகவிடம் தொடர்புகொண்டுள்ளனர்," என்று தம்பிதுரை கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இருக்கும் சூழ்நிலையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை மறைமுக மாக நடத்து வருகின்றது. அண்மையில் டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்தித்த போது ஐந்து நிமிடங்கள் அரசியல் நிலவரம் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தி னார்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுகவின் சம்மதத்தை அப்போது அவர் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும் இப்போதைய அதிமுக பலவீன மாக உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதால் அவரால் எந்தப் பயனும் இல்லை என்று கருதுவதாலும் கூட்டணி பற்றி பாஜக அதி கம் யோசிப்பதாக டெல்லி வட்டாரத் தகவல் கள் கூறின.