சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராக நடத்தப்பட்ட போராட்டத் தின்போது கலவரம் வெடித்து அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்தது போன்ற பல தகவல்கள் இன்னும் அதி காரப்பூர்வமாக வெளிவராமல் குழப்பம் நீடிக்கிறது. எனவே இது சம்பந்தமான வழக்கை தமிழக அரசிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக் கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஆஷா அமர்வு முன்னிலையில் நடந்தது. இந்த விஷயத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது,
இதனால் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு கடந்த ஆகஸ்டு மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ இன்னும் ஓரிரு நாளில் விசாரணையைத் தொடங்க இருந்த நிலையில் நேற்று இதை எதிர்த்து தமிழக அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய் துள்ளது. அந்த மனுவில், "இந்த வழக்கு சம்பந்தமாக விசா ரிக்க தமிழக அரசு சார்பில் ஒருநபர் ஆணையம் அமைக் கப்பட்டுள்ளது. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தேவை இல்லாத ஒன்று. சிபிஐக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து வழக்கு விசார ணையை தமிழக அரசே விசா ரிக்க உத்தரவிடவேண்டும்," எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

