ஓபிஎஸ்ஸை கடுப்பேற்ற சுவரொட்டிகள்

ஓபிஎஸ்ஸை கடுப்பேற்ற சுவரொட்டிகள்

1 mins read
Google News Preferred Icon

தேனி: 'எடப்பாடியார் பேரவை' என்ற பெயரில் முதலமைச்சரை புகழ்ந்து தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப் பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேனி, பெரியகுளம், கம்பம் உட்பட தேனி மாவட்டம் முழுவதும் எடப்பாடி பேரவை சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சுவரொட்டியில்கூட ஓபிஎஸ் பெயர் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சி.