விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தமிழக தலைமைக் காவலர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர் நீலமேக அமரன். தலைமைக் காவலராக இருந்த இவர் ஒரு வழக்கு விசாரணைக்காக விசாகப்பட்டினம் சென்றிருந்தார். அப்போது வேம்பேடு சுங்கச்சாவடி பகுதியில் காரில் வந்த எட்டுப் பேர் கொண்ட கும்பல் நீலமேக அமரனைச் சுற்றிவளைத்தது. பின் னர் தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக போலிஸ்காரர் ஆந்திராவில் வெட்டிக் கொலை: கும்பல் வெறிச்செயல்
1 mins read

