நீதிபதியின் குடும்பத்தாரை அவரது பாதுகாவலரே சுட்டார்; மனைவி பலி, மகன் கவலைக்கிடம்

2 mins read

குருகிராமின் மாவட்ட, அமர்வுகள் கூடுதல் நீதிபதி கிரிஷன் காந்தின் தனிப்பட்ட பாதுகாவலாளியே நீதிபதியின் மனைவி, மகனைச் சுட்டதில் மனைவி உயிரிழந்தார். மகன் கவலைக்கிடமான நிலை யில் மெடான்டா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று போலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் பிற்பகலில் நீதிபதியின் 38 வயது மனைவி ரிது காந்தும் அவர்களது 18 வயது மகன் துருவ்வும் ஆர்கடியா மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்ப எத்தனித்தனர். காரின் சாவியை மகிபால் சிங் எனும் நீதிபதியின் பாதுகாவலரிடம் துருவ் கேட்டவுடன் மகிபால் சிங் கிளர்ந்தெழுந்தார். பின்னர், தாயையும் மகனையும் நோக்கி வேகமாகச் சென்ற மகிபால், திருமதி ரிதுவை மார்பிலும் அடி வயிற்றிலும் சுட்டார்.

துருவ்வுக்குத் தலையிலும் தோள்பட்டையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இந்த நிகழ்வுகள் பற்றி திருமதி ரிது உயிரிழப்பதற்கு முன்பாக கண வரும் நீதிபதியுமான திரு கிரிஷன் காந்திடம் தெரிவித்ததாகக் கூறப் பட்டது.

துப்பாக்கியால் சுட்டதும் நிலை குலைந்த துருவ்வை காரில் ஏற்ற மகிபால் முயற்சி செய்ததாகவும் அது இயலாமல் போனதும் காரை வேகமாகச் செலுத்திக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். பாதுகாவல் பணிக்காக மகிபாலுக்கு வழங்கப்பட்ட துப்பாக் கியைக்கொண்டே இருவரையும் சுட்டதாக போலிஸ் தரப்பில் கூறப் பட்டது.

காரில் செல்லும் வழியில் நீதிபதி கிரிஷன் காந்துடன் கைபேசி வழியாகத் தொடர்பு கொண்ட மகிபால், "உங்களுடைய மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டேன்," என்று கூறியதாகத் தெரிவிக் கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது தாயாருக்கும் வேறு சிலருக்கும் கைபேசி வழியாக சம்பவம் பற்றி மகிபால் தெரிவித்ததாகவும் பின் னர் காவல் நிலையம் ஒன்றுக்கு மகிபால் சென்றதாகவும் கூறப்பட்டது.