வயிற்றிலிருந்து 33 கிலோ கட்டியை அகற்றி சாதனை

வயிற்றிலிருந்து 33 கிலோ கட்டியை அகற்றி சாதனை

1 mins read
Google News Preferred Icon

கோயம்புத்தூரில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 33.5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி, கோவை மருத்துவர்கள் பெரும் சாதனை படைத்துள்ளனர். ஊட்டியைச் சேர்ந்த வேளாண் தொழிலாளியான திருமதி வசந்தா என்பவருக்கு வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் நாளடைவில் பெரிதாகி வலியை ஏற்படுத்தியது. அவரது உடல் எடையும் 75கிலோ வரை கூடியது. நடப்பது, உணவு உட் கொள்வது, மூச்சுவிடுவது போன் றவைகூட திருமதி வசந்தாவுக்கு மிகவும் சிரமமாக இருந்தன.

அருகில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சையை நாடியபோது, அவரது சினைப்பையில் பெரிய கட்டி இருப்பதாகவும் அதை அகற்று வது திருமதி வசந்தியின் உயி ருக்கே பாதிப்பாக அமையலாம் என்றும் கூறப்பட்டது. பின்னர், அவர் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையின் உத வியை நாடினார். அங்கு பரிசோத னைக்குப் பின், மருத்துவர்கள் செந்தில்குமார், பியூஸ், அனிதா, சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு திருமதி வசந்தாவின் எடை 42 கிலோ என்று கூறப்பட்டது.