இந்திய, வெளிநாட்டு செய்தி யாளர்களால் #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத் தப்பட்ட மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், தம்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் அவற் றைச் சட்டரீதியாகக் கையாளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இணையத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகள் வெளியானபோது நைஜீரியாவில் இருந்த அவர், நேற்றுக் காலை புதுடெல்லி திரும்பினார்.
குற்றச்சாட்டுகளின் தொடர்பில் தமது பதவிவிலகல் கடிதத்தை மின்னஞ்சல் வழியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு அக்பர் அனுப்பி இருப்பதாக ஊடகங்களில் நேற்று தகவல் வெளியானது. இதற்கிடையே, நேற்று விமான நிலையத்தில் செய்தி யாளர்களின் கேள்விக்கு "அறிக்கை பின்னர் வெளியா கும்," என்றார் திரு அக்பர். நேற்று பிற்பகலில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "பொதுத்தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதுபோன்ற அடிப்படை, ஆதா ரமற்ற குற்றச்சாட்டுகளாக உள்ளன. என்மீது களங்கம் சுமத்தும் இந்த முயற்சியை சட்டப்படி எதிர்கொள்வேன்," என்று கூறியுள்ளார்.

