பிரதமர் பெயரைச் சொல்லி மோசடி: பெண் மீது போலிசில் புகார்

பிரதமர் பெயரைச் சொல்லி மோசடி: பெண் மீது போலிசில் புகார்

1 mins read
Google News Preferred Icon

சேலம்: பெண்கள் தொழில் தொடங்க பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய திட்டத்தின்கீழ் வட்டியின்றி ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று கூறி பலரிடம் மோசடி செய்த பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. சேலத்தைச் சேர்ந்த 35 வயதான பாப்பாத்தி என்ற அப்பெண், மும்முடி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் மகளிர் குழுக்களை அணுகி, கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, அதற்கான பதிவுக் கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளார். ஆனால் சொன்னபடி கடன் பெற்றுத் தராததால் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் அவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பாப்பாத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.