கிரண்பேடி: முறைகேடு ஏதும் நடக்கவில்லை

கிரண்பேடி: முறைகேடு ஏதும் நடக்கவில்லை

1 mins read

புதுவை: சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு நிறு வனங்கள், சமூக சேவை அமைப்பு களிடம் இருந்து நிதி வசூல் செய்வதில் முறைகேடு நடப்பதாக கூறப்பட்ட புகாரை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய அவர், யாரிடமும் ஆளுநர் மாளிகை நேரடியாக எந்தவித நிதியும் வசூலிக்க வில்லை எனக் குறிப்பிட்டார்.

"புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குறைந்த பட்சம் 6 முதல் 15 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக முக்கிய பாசன கால்வாய், கிளை கால்வாய் களை பொதுப்பணித்துறையால் தூர்வார முடியவில்லை. "இந்த நிலையில் 'நீர்வளமிக்க புதுச்சேரி' என்ற இலக்குடன் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை ஆளுநர் மாளிகை மேற்கொண்டு வருகிறது. வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளையும், பாசன கால் வாய்களையும் தூர்வார நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார் ஆளுநர் கிரண் பேடி.

இந்தப் பணியை மேற்கொள்ள ஆளுநர் மாளிகை ஊக்கியாக மட்டுமே செயல்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், மாறாக ஆளு நர் மாளிகை பணம் எதையும் நேரடியாகப் பெறவில்லை எனத் தெளிவுபடுத்தினார். "பணப் பரிமாற்றமே நடக்காத போது, இதில் ஊழல் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்? குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருந்து கொண்டு இருக்கும்," என்றார் கிரண் பேடி. 2