ராமநாதபுரம்: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்கதையாகிவிட்டதாக தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும் என்றும் அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார் என்றும் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். "விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக்கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கைத் தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார் பிரபாகரன்,'' என்றார் நெடுமாறன்.
நெடுமாறன்: ஈழப் போராட்டம் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்
1 mins read

