முதல்வர் பதவி மீது ஆசை இல்லை: அன்புமணி விளக்கம்

முதல்வர் பதவி மீது ஆசை இல்லை: அன்புமணி விளக்கம்

1 mins read
Google News Preferred Icon

கோவை: முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தாம் வரவேற்பதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழக முதல்வர் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும் இல்லையேல் ஆளுநர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். "வரும் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையில்லை. அடுத்த தேர்தல் பற்றி யோசிக்காமல் அடுத்த தலைமுறை பற்றி யோசிக்கும் தலைவராக ஓர் அரசியல்வாதி இருக்க வேண்டும். பாமக ஆட்சி அமைவது தமிழகத்துக்கு நல்லது," என்றார் அன்புமணி ராமதாஸ்.