டீ குடித்து வருவதாகக் கூறி போலிசிடமிருந்து தப்பிய கைதி

டீ குடித்து வருவதாகக் கூறி போலிசிடமிருந்து தப்பிய கைதி

2 mins read

சென்னை: நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போன்று கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம் பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி, டீ குடித்துவிட்டு வருவ தாகக் கூறி தப்பியோடியுள்ளார்.

சென்னை காசிமேடு பகுதி யைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி யான பல்சர் பாபு மீது 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளன. பல்சர் பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறி செய் வது இவரது இயல்பு. அதனால் பாபு என்ற பெயருக்குக் முன் பல்சர் அடை மொழியாய் ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்து குற்றச்செயல் புரிந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப் பட்ட அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார் பல்சர் பாபு.

கஜேந்திரன், சுந்தர் என்ற 2 ஆயுதப்படை காவலர்கள் அவரை கண்காணிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர். கஜேந்திரன் கண் காணிப்புப் பணியில் இருந்த போது, தனக்குத் தலை வலிப்ப தாகக் கூறிய பல்சர்பாபு, ஒரு டீ வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

கைதியின் மீது பரிதாபப்பட்ட காவலர் கஜேந்திரன், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று அன்போடு டீயும் பிஸ் கட்டுகளையும் வாங்கிக் கொடுத் துள்ளார். அப்போது, கஜேந்திர னிடம் பணியை மாற்றிக் கொள் வதற்காக சுந்தர் என்ற காவலர் பல்சர் வாகனத்தில் டீக்கடைக்கு வந்துள்ளார்.

கஜேந்திரனுடன் பேசியபடி வண்டியில் இருந்து இறங்கிய சுந்தர், தனது துப்பாக்கியையும் சாவியையும் வண்டியிலேயே மறந்து வைத்துவிட்டு டீக்கடைக் குச் சென்றுள்ளார். பேசும் ஆர் வத்தில் பாபுவை கண்காணிக்க காவலர்கள் மறந்துள்ளனர். அதனால், பல்சர் வண்டியைக் கண்ட பாபு, துப்பாக்கியை எடுத்து அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு மிகவும் பிடித்த பல்சர் வண்டி யிலேயே தப்பிச்சென்றுள்ளார். பல்சர் பாபு தப்பியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள், அப்பகுதி முழுவதும் தேடியலைந் துள்ளனர். இதுகுறித்தும் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.