உரலில் அவல் இடித்து மாநில அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

உரலில் அவல் இடித்து மாநில அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

1 mins read
a308352e-6a2a-4514-a116-063c3f5ccec1
-

தஞ்சாவூர்: குறுவை நெல் சாகுபடி தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் தங்களது விளை நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் உள்ள மாநில அரசைக் கண்டித்து விவசாயிகள் உரல் உலக்கையுடன் நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜுலை 19ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கும் முன்பு வறட்சியான காலங்களில் டெல்டா விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு களை மட்டும் நம்பி குறுவை சாகு படியைக் குறைந்த அளவில் செய் திருந்தனர். இந்த சாகுபடி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சரி யாக நெல்லை கொள்முதல் செய் யாததைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல், முற்றுகை உள் ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உரல், உலக்கை எடுத்து வந்த விவசாயிகள், அதில் நெல்லைக் கொட்டி இடிக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களிலும் மூட்டை கள் தேங்கி உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு வெறும் 300 மூட்டை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.