சென்னை: அம்மா உணவகங்களில் படம்: ஊடகம் தரமற்ற உணவு வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள் ளார். சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்துக்கு அதி காரிகளுடன் சென்ற அவர், திடீ ரென்று ஆய்வு நடத்தினார். அங்கு சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கும் முறை, சமையல் பாத்திரங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் தரமான உணவுகளை வழங்கும்படி ஊழியர்களை அறி வுறுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, "அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாக வெளியாகும் தகவல் கள் தவறானவை. தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் உண வகங்கள் அதிகரிக்கப்படும். "அம்மா உணவகங்களில் தரமற்ற உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்," என்றார்.
எழும்பூர் அம்மா உணவகத்தில் உணவை சோதனையிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. படம்: ஊடகம்

