நட்பை முறித்துக் கொண்டதால் அமிலத்தை வீசிய ஆடவர்

நட்பை முறித்துக் கொண்டதால் அமிலத்தை வீசிய ஆடவர்

1 mins read

சேலம்: தன்னுடனான நட்பை பெண் ஒருவர் முறித்துக் கொண்டதால் அவர் மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்தி உள்ளார் ஆடவர் ஒருவர். சேலம் மாவட்டம் குகை என்னுமிடத்தில் பெண் மீது ஒருவர் அமிலம் வீசி விட்டுத் தப்பிச்சென்றுவிட்டார். அலறித்துடித்த அந்தப் பெண்ணை அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதித்தனர். 40% காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெண் மீது அமிலம் வீசித் தாக்குதல் நடத்தியது குகைப் பகுதி யைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்துள்ள து. கூலித்தொழிலாளியான சீனிவாசனுக்கும் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கும் நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஓராண்டுக்கு முன் சீனிவாசனுடனான நட்பை பெண் துண்டித்த ஆத்திரத் தில் அமிலத்தை அவர் வீசியுள்ளார். விசாரணை தொடர்கிறது.