ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

2 mins read
c46802d5-4b2d-4065-871e-6815d69760c9
-

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு இரண் டாவது முறையாக 66 அடியை எட்டியுள்ளதைத் தொடர்ந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதி காரிகள் இதுகுறித்து கூறும்போது, "வைகை நதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக பாய்வதால் அந்தக் கரையோர மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல் லும் வகையில் எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது," என்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை, நீர்பிடிப்புப் பகுதியான மூல வைகையாறு, வருசநாடு, வெள்ளி மலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு, முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது. இதன்மூலம் தேனி, திண் டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங் களின் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டு களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இந்நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 66 அடியாக உயர்ந்தது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் நேற்று அக்டோபர் 15ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. இதையடுத்து வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.