சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசிக்க அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்- மையில் உத்தரவிட்டிருந்தது. அதன் தீர்ப்பைத் தொடர்ந்து சபரிமலை கோவில் நடை தரி- சனத்திற்காக இன்று முதன் முறையாகத் திறக்கப்படுவதால் அக்கோவிலில் பலத்த பாது- காப்பு போடப்பட்டுள்ளது. இம்மாதம் 22ஆம் தேதி வரை ஆறு நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புப்படி சபரி- மலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடை இல்லை என்பதால் இன்- றிலிருந்து சபரிமலை கோவி லுக்குப் பெண் பக்தர்கள் வருகை தர வாய்ப்புள்ளது. பெண் பக்தர்கள் ஏராளமானோர் சபரி மலைக்குச் செல்ல 41 நாட்கள் விரதம் இருந்து வந்து உள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு சமரச தீர்வு காண மாநில அரசு நடவ- டிக்கை எடுத்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்ம- குமார் தலைமையில் திருவனந்த புரத்தில் நேற்று சமரச பேச்சுவார்த்- தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பந்தளம் அரச குடும்பம், தந்தி- ரிகள், பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பேச்சு- வார்த்தையில் கலந்துகொண்டன. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்- தையில் உடன்பாடு எதுவும் எட்டப் பட வில்லை.

"எங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமை யவில்லை. எங்களுடைய கோரிக்- கைகளை ஏற்க அவர்கள் தயாராக இல்லை'' என்று பந்தளம் அரண்- மனை சார்பில் பங்கேற்ற சசிக் குமார் வர்மா கூறினார். இந்நிலையில், பெண்கள் யாரேனும் சபரிமலைக்கு வருகிறார்- களா என்பதை கேரளாவில் உள்ள பெண்களே கண்காணித்து வரு- வதாகக் கூறப்படுகிறது. பேருந்துகளிலும் கார்களிலும் பெண்களே அதிரடியாக சோதனை யிட்டு, சபரிமலை நோக்கி வரும் பெண்களை ஆங்காங்கே இறக்கி- விட்டு, தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.

சபரிமலை கோவிலுக்குச் செல்லும் காரை வழியில் நிறுத்தி பெண் பக்தர் எவரும் உள்ளாரா என்பதைச் சோதிக்கும் கேரள பெண்கள். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!