காலாங் பாயலேபார் விரைவுச் சாலை, தெம்பனிஸ் விரைவுச் சாலை யுடன் பொங்கோலை இணைக்கும் புதிய சாலை நவம்பர் மாத இறுதிக்குள் போக்குவரத் துக்குத் திறக்கப் படவுள்ளது. இச்சாலை அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பொங்கோல் வே, காலாங் பாயலேபார் விரைவுச்சாலை ஆகிய வற்றுக்கு இடையில் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் ஏற்படும் போக்கு வரத்து நெரி சலைக் கட் டுக் குள் கொண்டுவர இந்தப் புதிய சாலை அமைப்ப தற்குத் திட்டமிடப்பட்டது. இந்தப் புதிய சாலைக்கான பணிகள் அனைத்தும் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவுபெற்று விடும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங் நேற்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளா ர்.
பாசிர் ரிஸ் = பொங்கோல் குழுத் தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினருமான திரு எங், இந்த நற்செய்தியைக் கேட்ட பொங்கோல் குடியிருப்பாளர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ள தாகத் தெரிவித்துள்ளார். காலாங் பாயலேபார் விரைவுச் சாலையுடனும் தெம்பனிஸ் விரைவுச்சாலையுடனும் மற்ற சாலைகளை இணைக்கும் விரைவுச் சாலை விரிவாக்கத் திட் டம் சென்ற 2015ஆம் ஆண்டு தொடங்கியது. விரைவுச் சாலை விரிவாக்கம், சுங்கை சிராங்கூன் மற்றும் சுங்கை புளுக்கர் ஆகிய வற்றுக்கு இடையில் மூன்று பாலங் கள் அமைத்தல் ஆகிய பணிகள் அப்போது தொடங்கின. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்

