நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு; ராணி பாலியல் புகார் மீட்பு

நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு; ராணி பாலியல் புகார் மீட்பு

1 mins read
2bc180db-5487-4d83-932e-4c7955098163
-

செங்குன்றம்: தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சண்முக ராஜன் மீது நடிகை ராணி போலி சில் புகார் கொடுத்தவர், சில மணி நேரங்களில் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து புகாரை மீட்டுக்கொண் டுள்ளார். 'வில்லுப்பாட்டுக்காரன்' படத் தில் கதாநாயகியாக நடித்துள்ள ராணி, விக்ரமின் ஜெமினி படத் தில் வரும் 'ஓ போடு' பாடல் மூலம் பிரபலமடைந்தார். இவர் வடபழனி சாலிகிராமத் தில் அருணாசலம் சாலையில் கணவர் பிரசாந்துடன் தங்கியுள் ளார். கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் சண்முகராஜன், 55. 'நந்தினி' தொடரில் நடிகை ராணியின் கணவராக நடித்து வருகிறார்.

கடந்த 11ஆம் தேதி சென்னை வடபழனியில் தொலைக்காட்சித் தொடருக்கான படப்பிடிப்பு நடந்த போது ராணி சண்முகராஜனை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ராணி சண்முகராஜனை நிஜ மாகவே அறைந்துள்ளார். இத னால் ஆத்திரமடைந்த சண்முக ராஜன் ராணிக்கு கடந்த ஒரு வாரமாக பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார்.

'மீடூ' விவகாரம் தொடர் பில் சின்மயிக்கு ஆதர வாகவும் வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்கவேண்டும் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேட்டுள்ள நிலையில், சண்முகராஜன் (வலது) மீது கொடுத்த புகாரை மீட்டுக்கொண்டார் ராணி. படம்: ஊடகம்