கோயிலில் திருட்டுப்போன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

1 mins read
031d91ff-9721-4a8e-91e5-2d641d180eae
-

திண்டுக்கல்: உழைத்து சம்பாதிக்காமல் ஒரேநாள் இரவில் அம்பானி போல் கோடீஸ்வரனாகி விடவேண்டும் என்ற நினைப்புடன் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளை அடிக்க திருடர்கள் நாடெங்கும் கன்னம் வைத்து வருகின்றனர். இதுபோல் மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்த குருவித்துறையில் சித்திர வல்லப பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 2,000 ஆண்டு பழமையான வல்லப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் சிலைகளை சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகளும் திண்டுக்கல் மாவட் டம், விளாம்பட்டி என்ற இடத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் சாலை ஓரம் வீசப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் சேதமடைந்துள்ள தாகவும் காவல்துறையினர் தெரி வித்துள்ளனர்.

சோழவந்தான் அருகே கோயிலில் இருந்து திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன் றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலை மதிப்பிருக்கும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஐஜி பொன்.மாணிக்க வேல் தெரிவித்துள்ளார்.

பலகோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகள். படம்: ஊடகம்