எச்1என்1 காய்ச்சலைத் தடுக்க துரித நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்து

எச்1என்1 காய்ச்சலைத் தடுக்க துரித நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்து

1 mins read

சென்னை: தமிழகத்தில் எச்1என்1 காய்ச்சல் வேகமாகப் பரவு வதைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாமக இளையரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடும் பாதிப்பு களை ஏற்படுத்தியுள்ள இக்காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கி உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். பலர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு மூடி மறைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.