குளிர்சாதன இயந்திரம் இயங்கவில்லை: சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம் ரத்து

குளிர்சாதன இயந்திரம் இயங்கவில்லை: சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம் ரத்து

1 mins read
Google News Preferred Icon

திருச்சி: சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குளிரூட்டி (ஏசி இயந்திரம்) பழுதடைந்ததால் பய ணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூர் செல்லவிருந்தது. அதில் 115 பயணிகள் பயணம் மேற்கொள்ள இருந்தனர். இந்நிலையில் விமானத்துக்குள் சென்ற பயணிகள் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தலைமை விமானிக்குத் தகவல் தெரிவிக் கப்பட்டதை அடுத்து விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதா என அவர் சோதித்துப் பார்த்தார்.

இதில் விமானத்தின் குளி ரூட்டி இயந்திரம் பழுதடைந்தது தெரியவந்தது. இதையடுத்து பய ணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, தங்கு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் பழுதைச் சரிசெய்ய முடியாததால் அந்த விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதனால் கடும் விரக்தி யும் ஏமாற்றமும் அடைந்த பய ணிகள் பலர் தங்கள் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை சுமார் 3 மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த மாற்று விமானத்தில் மீத மிருந்த பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அண்மையில்தான் திருச்சியில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானம் விபத்தில் சிக்கியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஏர் இந்தியாவின் மற்றொரு விமா னத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.