சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரும் ஆயுள் தண்டனைக்கான காலத்தைவிட அதிக காலம் சிறையில் இருந்துள்ளனர் என்று தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்த தையே போதுமானதாகக் கருதவேண்டும் என இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனு ஒன்றில், மிகவும் கவலை தரக்கூடிய ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தில் தானும் சிக்கிப் பலத்த காயமடைந்ததாகவும், கொலை வழக்கில் தாமும் 47ஆவது சாட்சியாக சேர்க்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"இவ்வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் வாக்கு மூலத்தை முறையாக பதிவு செய்யாததன் விளைவாக அவர் தண்டிக்கப்பட்டார். "இதையறிந்ததும் 7 பேருக்கும் தண்டனை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்," என்று தா. பாண்டியன் கூறியுள்ளார். ஆளுநரின் கையெழுத் தில்தான் 7 பேரின் விடுதலை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

