பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கத்தில் முதியவர் ஒருவரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவர் வைத்திருந்த கைபேசியைப் பறித்துச்சென்ற மூவரை நேற்று போலிசார் கைது செய்தனர். தனது கைபேசியை மீட்க முதியவர் ஸ்கூட்டரில் வந்த திருடர்களுடன் போராடியபோது அவர் சுமார் 100 மீட்டர் தூரம் வரை சாலையில் இழுத்துச்செல் லப்பட்டார். சென்னை நெற்குன்றம், மேட் டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெய பாண்டியன், 66. இவர் வளசர வாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பு வதற்காக சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரே ஸ்கூட்டரில் வந்த மூன்று பேர், ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்பதுபோல் நெருங்கினர்.
சற்று நேரம் பேசியவர்கள் முதியவர் சட்டைப் பையில் வைத்திருந்த கைபேசியை எடுத்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்ற னர். இதைத் தொடர்ந்து ஜெய பாண்டியன் தனது கைபேசியை மீட்பதற்காக திருடர்களை ஸ்கூட்டருடன் ஓடியபடியே துரத்தினார். ஆனாலும் திருடர்கள் ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஜெயபாண்டியனைத் தரையில் இழுத்தபடி சென்றனர். இதனால் ஜெயபாண்டியனின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. ஜெயபாண்டியன் மோட்டார் சைக்கிளில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு புகைப்படக் கருவியில் பதிவாகி இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக மதுரவாயல் பல்கலைக்கழக மாணவர் சக்திவேல், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா ஆகியோருடன் 12ஆம் வகுப்பு மாணவர் ஒரு வரையும் நேற்று கைது செய்த காவல்துறையினர், அவர்களிட மிருந்து கைபேசியுடன் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

