சின்மயிக்கு குரலெழுப்பும் மக்கள் ஸ்ரீரெட்டிக்கு மௌனம் காக்கக்கூடாது

சின்மயிக்கு குரலெழுப்பும் மக்கள் ஸ்ரீரெட்டிக்கு மௌனம் காக்கக்கூடாது

1 mins read
805d8af2-40e5-4cb0-9f5d-2c56de46930e
-

சென்னை: சின்மயிக்காக மட்டும் உரக்கக் கூவி குரலெழுப்பும் மக்கள் ஸ்ரீரெட்டி புகாரளித்தபோது மட்டும் வாய் திறக்காமல் மௌனம் காத்தது ஏன்? என்று கேட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், அப்படி நடந்துகொண்டது தவறு என்றும் கூறியுள்ளார். சின்மயிக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இதேபோன்ற குற்றச் சாட்டுகளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீ ரெட்டி ஆதாரத்துடன் பெயரைக் குறிப்பிட்டு குற்றம்சாட்டியபோது மட்டும் ஏன் அதற்கு யாருமே ஒன்றும் கூறவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான், "கடவுளாக வணங்கக் கூடிய பெண்களைப் போற்ற வேண்டிய சமூகத்தில், அவர்களைப் பாதுகாக்க தனிக்குழு அமைக்கவேண்டிய அவலத்திற்கு நிலைமை வந்துவிட்டது. "தற்போது 'மீடூ' ஹேஷ்டேக் மூலம் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்தியுள்ள குற்றச் சாட்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சித்தார்த், ஸ்ரீரெட்டிக்காகவும் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப் பட்டு கொல்லப்பட்டார். அப்போது உங்கள் குரல்வளை எங்கிருந்தது. "உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ மீது தனது மகளை பலாத்காரம் செய்ததாக போலிசில் புகார் செய்த தந்தை கொல்லப் பட்டார். அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. எல்லா கற்களும், அம்புகளும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்?" என அவர் கேட்டுள்ளார்.