தமிழகத்தில் தண்ணீரின்றி லட்சக்கணக்கானோர் அவதி

தமிழகத்தில் தண்ணீரின்றி லட்சக்கணக்கானோர் அவதி

2 mins read
3e2351d1-f2ff-4e9b-86ee-aa751fd222f0
-

சென்னை: பொழுது விடிந்து பொழுது போனால் பொன்போன்று மதிக்கப்படும் தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு வேளையும் ஓடாது. ஆனால் இந்த தண்ணீர் கிடைக் காமல் தமிழகத்தில் லட்சக் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ள தண்ணீர் லாரி ஓட்டுநர்கள், நிலத்தடி நீர் எடுப்பது குறித்து ஒரு தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்ட மாட்டோம் என்று கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து 'கேன்' குடிநீர் உற்பத்தி, விநியோகிப்பாளர்களும் நேற்று முதல் இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். 'கேன்' குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.

நிலத்தடி நீரை எடுப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளதால் தங்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ் சாட்டியுள்ள 'கேன்' குடிநீர் உற் பத்தியாளர்கள், தங்களது 'கேன்' குடிநீர் உற்பத்தியை நிறுத்திவிட்ட தாகவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், முக்கியமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் பகுதி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

பொதுவாக இந்த லாரி தண்ணீர் எல்லாம் டேங்குகளில் மாற்றப்பட்டு விநியோகம் செய்கின் றனர். சிறுசேரி, தாழம்பூர், ஆலத் தூர், பையனூர், தண்டலம், பொன் மார், பனங்காட்டுப்பாக்கம், நாவ லூர், இள்ளலூர், திருப்போரூர், வெண்பேடு, காயார் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகளில் உள்ள தண்ணீர் சுத்தம் செய்யப்பட்டு அந்த நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 95% மக்களும் பெரும்பாலான கடைகள், வீடுகள், நிறுவனங்கள் இந்த கேன் தண்ணீரை நம்பித்தான் இருக்கின்றன. படம்: ஊடகம்