இரட்டைக் கொலை; பேருந்துகள் உடைத்து நொறுக்கப்பட்டதால் பதற்றம்

இரட்டைக் கொலை; பேருந்துகள் உடைத்து நொறுக்கப்பட்டதால் பதற்றம்

2 mins read

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை டிஐஜி, நீதிபதி வீடுகளுக்கு அருகே வெடிகுண்டு வீசி இருவர் கொல்லப்பட்ட சம்ப வம் தொடர்பில் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே நடை பெற்ற இந்த இரட்டை படுகொலை சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரட்டைக் கொலைச் சம் பவத்தின் எதிரொலியாக நேற்று ராமநாதபுரத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி கண் ணாடிகள் உடைக்கப்பட்டன.

அதனால், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நயினார் கோயில் காவல்நிலையத்தில் சுமார் அரை மணி நேரத்திற்குள்ளாக பாஸ்கரன் (40), முருகேசன் (37), ரூபன் (25), அர்ஜீன் (25), மற்றும் முரளி ((20) ஆகிய ஐவர் கொண்ட கும்பல் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரும் இவரது நண்பரான ஓம்சக்தி நகரைச் சேர்ந்த விக்கி என்பவரும் நேற்று நீதிமன்றத்தில் கையெழுத்துப்போட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது நீதிபதி வீடு அருகே மறைந்திருந்த கும்பல் ஒன்று இருவரும் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டை வீசியது. இதில் கார்த்தி சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து தப்பி ஓடிய விக்கியை விடாமல் துரத்திச் சென்ற அந்தக் கும்பல் டிஐஜி வீடு அருகே சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட விக்கி உயிரிழந்தார். இதனிடையே படுகொலையான இருவரும் எற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலாந் தரவையில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. அந்தக் கொலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு வரும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.