எம்ஜே அக்பருக்கு எதிராக திரண்ட 20 பெண்கள்

எம்ஜே அக்பருக்கு எதிராக திரண்ட 20 பெண்கள்

2 mins read

புதுடெல்லி: முன்னாள் இணை அமைச்சர் எம்ஜே அக்பருக்கு எதிராக 20 பெண் பத்திரிகையாளர் கள் ஒன்று திரண்டுள்ளனர். மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருந்த எம் ஜே அக்பர், அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணி யாற்றியுள்ளார். அந்தக் காலகட் டங்களில் பெண் பத்திரிகையாளர் களுக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித் ததாக தற்போது புகார்கள் தெரி விக்கப்பட்டு வருகின்றன. பாலியல் தொல்லைக்கு ஆளா னவர்கள் #MeToo என்னும் பிர சாரத்தின்கீழ் பல தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். அக்பர் மீது ஏற்கெனவே 14 பெண்கள் பாலியல் புகார் கூறிய நிலையில் செவ்வாய்க்கிழமை மேலும் இரு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறினர்.

பெண் செய்தியாளர் து‌ஷிதா படேல், பெண் தொழிலதிபர் சுவாதி கெளதம் ஆகியோர் அவர்கள். இத னால் அக்பருக்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து ள்ளது. து‌ஷிதா படேல் வெளியிட்டுள்ள இணையப் பதிப்பில், "எம் ஜே அக்பர் எனக்கு வலுக்கட்டாய மாக இருமுறை முத்தம் கொடுத் தார். "ஒருமுறை ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அவர் உள்ளாடையுடன் என்னை வரவேற்றார்.

அக்பர் செய்த தவறுகளைப் பற்றி இன்றைக்கு நான் பேசாவிட்டால் அவர் செய்த குற்றங்களுக்கு நான் உடந்தையாக இருந்ததுபோல் ஆகிவிடும்," என்றார். எம் ஜே அக்பர், தம் மீது முதன் முதலில் பாலியல் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்பவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். தம் மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் தெரிவித்த அக்பர், இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று கூறி வருகிறார்.