புதுடெல்லி: சிறையில் கைதிகளை தாக்கியதாக தமிழக போலிசார் 53 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள 18 கைதிகளிடம் கைபேசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக போலி சாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட 53 போலி சார் உயர் பாதுகாப்பு சிறை களில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த கைதி களுக்கும் போலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கைதிகள் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக சின்மய் கனோஜியா என்ற கைதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உண்மை கண்டறி யும் குழு அமைக்க உத்தரவிட் டது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு கைதி களைப் பரிசோதனை செய்தது. அக்குழு தாக்கல் செய்த அறிக் கையில் கைதிகள் தாக்கப்பட் டது உறுதியானது. இதன்பேரில் கைதிகளைத் தாக்கியதில் தொடர்புடைய போலிசார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதன்படி 53 தமிழக போலிசார் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி ஏற்கெனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

