திருச்சி: துபாய் நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முகப்பு விளக்குகள் எரியாததால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க் கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் துபாய்க்குப் புறப்பட்டது. ஓடுபாதையில் சென்றபோது அதன் சிவப்பு விளக்குகள் எரிய வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். இதுகுறித்து விமான நிலைய கட்டுப் பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக விமானங்களை இயக்குவதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் முகப்பு விளக்கு எரியவில்லை: திருச்சியில் பரபரப்பு
1 mins read