சென்னை: தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் குடியேறி வருவதால் தமிழர்களுக்குப் பிரச்சினை ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வடமாநிலத்தவர்களுக்கு அனைத்து வசதிகளை யும் ஏற்படுத்திக் கொடுத்து, தமிழர்களை அகதிகளாக மாற்ற முயற்சி நடப்பதாகக் குறிப்பிட்டார். "ஒருநாள் வட இந்தியர்களால் விரட்டியடிக்கப்படுவோம். அத் தகைய நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது," என்றார் சீமான்.
வெளியேற்றப்படுவோம்: சீமான் பேச்சு
1 mins read

