தூத்துக்குடி: சுங்கத் துறை யின் பாதுகாப்பில் இருந்த செம் மரக்கட்டைகள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ.6.8 கோடி என மதிப்பிடப்பட்டுள் ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்குக் கடத்தப்பட இருந்த 15 டன் செம்மரங்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடை பெற்று வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங் கள் சுங்கத் துறையின் அங்கீ காரம் பெற்ற தூத்துக்குடி தனியார் கொள்கலன் முனையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்தச் செம் மரக்கட்டைகளைச் சிலர் திருடி இருப்பது அதிகாரிகளின் ஆய்வு மூலம் தெரிய வந் துள்ளது. இதுகுறித்து போலி சார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த செம்மரம் திருட்டு
1 mins read

