கிரண்பேடியை சிறைபிடித்த மாணவர்கள்

கிரண்பேடியை சிறைபிடித்த மாணவர்கள்

1 mins read

புதுவை: தாங்கள் எழுப்பிய புகார்கள் தொடர்பில் உரிய பதில் கூறாததால் புதுவை ஆளுநர் கிரண் பேடியை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் ஆளுநர் கிரண்பேடி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரியிலும், அதன் விடுதியிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என மாணவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

அதற்கு மழைநீர் சேகரிப்பு தொடர்பாக மட்டுமே தாம் ஆய்வு செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தார் கிரண் பேடி. இத னால் கடும் அதிருப்தி அடைந்த மாணவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல முடியாத வகையில் கல்லூரி வாயிற்கதவு அருகே மாணவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வழியை மறித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கூடுதல் போலிசார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்துப் போலிசார் வாகனங்களை அப்புறப்படுத்தி வாயிற்கதவையும் திறந்ததை அடுத்து ஆளுநர் கிரண் பேடி யின் கார் வேகமாகப் புறப்பட்டுச் சென்றது.