ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: தேசிய சிறுசேமிப்பு நிதியின் மூலம் 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு செலுத்து மூலதனமாக ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், எண்ணெய் நிறுவனங்களுக்கு, எரிபொருள் நிலுவைத் தொகையாக 'ஏர் இந்தியா' குழுமம் 4,200 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால் எரிபொருள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என இம்மாத தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்திருந்தன. இதையடுத்து 'ஏர் இந்தியா' நிதி நிலையை மேம்படுத்த ரூ.2,121 கோடி செலுத்து மூலதனமாக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் செலுத்து மூலதனமாக ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது," என்றார்.