புதுடெல்லி: பாலியல் புகாருக்கு ஆளாகி பதவியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கை டெல்லி நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. வரும் அக்டோபர் 31ஆம் தேதி எம்.ஜே. அக்பர் நேரில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் பதவி விலகினார்
எம்.ஜே அக்பர் நேரில் முன்னிலையாக உத்தரவு
1 mins read

