சென்னை: மத்திய பிரதேச மாநி லத்தைச் சேர்ந்த 'பார்தி' இன கொள்ளையர்கள் 2016 ஆகஸ்ட் 9ஆம் தேதி சேலம்=சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மேற் கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்துத் தப் பினர். இதுகுறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலிசார் பார்தி இன கொள்ளையர்களான தினேஷ், 38, ரோஹன், 29, ஆகியோரை இம்மாதம் 12ஆம் தேதி கைது செய்தனர்.
ரயிலின் மேற்கூரையில் துளை யிட்டு பார்தி இனத்தவர்கள் நடத்திய கொள்ளை தமிழகத் திற்குப் புதியது என்பதால் அவர் கள் பற்றி துப்புதுலக்க போலி சாருக்கு ஈராண்டுகள் தேவைப்பட் டன. இந்நிலையில், பார்தி இன கொள்ளையர்கள் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நரங்களில் உள்ள வங்கி கள், நகைக்கடைகள், பெரிய வர்த் தக நிறுவனங்களில் கொள்ளை யடிக்கத் திட்டமிட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடும்போது இவர்கள் ஆயுதங் களைப் பயன்படுத்தி கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் என் பதும் ரயில் கொள்ளையில் சிக்கிய இருவர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. இதனால், உஷாரான போலிசார், அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளனர். முக்கிய நகரங்களில் சாலை ஓரங்கள், ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பலுன் வியாபாரி, பஞ்சுமிட்டாய் வியாபாரி போல கூடாரம் அமைத்து தங்கி இருப்போரை ரகசியமாகக் கண் காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சிபிசிஐடி போலி சார் கூறுகையில், "கொள்ளை யடிக்கும் இடத்தில் நகை, பணம் கிடைக்கவில்லை என்றால் ஆத் திரத்தைத் தீர்க்க பார்தி இனத்தவர் கொலையும் செய்வர். வெளி மாநிலக் கொள்ளையர்கள் குறித்து மாநிலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகக் கண்காணிக்கப் பட்டு வருகிறது. எனவே, கூடாரங் கள் அமைத்து தங்கியுள்ள வட மாநிலத்தினர் பற்றி சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் உடன டியாக போலிசிடம் தகவல் தெரி விக்க வேண்டும்," என்றனர்.

