ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத் தூரைச் சேர்ந்தவர் சீதாராமன் அய் யர். 1905ல் பிறந்த இவர், எஸ்எஸ் எல்சி படித்துவிட்டு கோவையில் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தார். ஆத்தூர் கடைவீதியில் 'லண்டன் மிஷன் பள்ளி'யில் ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது ஜி.சுப்ரமணிய அய் யர் நடத்தி வந்த 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் பகுதி நேர நிருப ராகப் பணிபுரிந்தார். ஆசிரியர் பணி முடிந்ததும் 20 ஆண்டுக ளுக்கும் மேலாக உள்ளூர் பிரச்சி னைகளை பத்திரிகைக்கு செய்தி யாக அனுப்புவதுடன் சமூகசேவை களிலும் ஈடுபட்டு வந்தார்.
1930ஆம் ஆண்டில் ஆத்தூர் வழியாக சேலம்-விருத்தாச்சலம் ரயில் பாதைத் திட்டம் அமைக்கக் கோரி 600 பேரிடம் கையெழுத்து பெற்று ஆங்கிலேய அரசிடம் வழங் கினார். 1932ஆம் ஆண்டு ரயில் பாதைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் சேவை யாற்றி வந்த இவர், 1983ஆம் ஆண்டு தமது 78வது வயதில் உயிரிழந்தார். அவரைப் போற்றும் வகையில், ஆத்தூர் வரசித்தி விநாயகர் கோயில் கோபுரத்தில் சீதாராமன் அய்யருக்கு உருவச் சிலை வைத்து அப்பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். அவரது சேவைகளைப் போற் றும் விதமாக விநாயகர் கோயில் கோபுரத்தின் தெற்குத் திசையில் சிலை வைக்கப்பட்டு ஆத்தூர் மக்கள் வழிபட்டு வருவதாக குமார் என்பவர் ஊடகங்களிடம் கூறினார்.

