மருத்துவமனையில் வைரமுத்து

1 mins read

மதுரை: திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். உணவு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக அவர் அங்கு சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியிருந்தார். அதற்கு வைரமுத்து மறுப்புத் தெரி வித்த நிலையில், சின்மயி மீண்டும் குற்றம் சாட்டி காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கும் மறுப்புத் தெரிவித்த வைரமுத்து, "என் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானவை, உள்நோக்கமுடையவை," என்று வைரமுத்து காணொளி மூலம் சொல்லியிருந்தார்.