500 பங்ளாதே‌ஷியருக்கு போலி ஆதார் அட்டை: ஆடவர் கைது

500 பங்ளாதே‌ஷியருக்கு போலி ஆதார் அட்டை: ஆடவர் கைது

1 mins read
e47633d0-033e-4086-9822-f40799e62d00
-

திருப்பூர்: திருப்பூர் செவந்தாம் பாளையம் சாமந்த தோட்டத்தில் எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த பங்ளாதேஷ் நாட்டவர் 8 பேரை திருப்பூர் போலிசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா, 34, அச்சடித்து கொடுத்தார் எனக் கூறி இருந்தனர்.

ஓர் ஆதார் அட்டைக்கு 6,000 ரூபாய் கொடுத்ததாகவும் அவர்கள் கூறி இருந்தனர். அதனைத் தொடர்ந்து தீவிரத் தேடலுக்குப் பின்னர் ராம்சிஷ் வர்மா கோல்கத் தாவில் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரித்தபோது அவன் பீகாரில் கணினி நிலையம் நடத்தி வந்தபோது கொடுக்கப்பட்ட அடையாள அட்டையிலிருந்து அவினாசியில் போலி ஆதார் அட்டை அச்சடித்துக் கொடுத்தது தெரியவந்தது.

திருப்பூர் மற்றும் பீகாரில் 500க்கும் மேற்பட்ட பங்ளாதே‌ஷி யருக்கு போலி ஆதார் அட்டை களை அவன் அச்சடித்து விநி யோகித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஈராண்டுகளாக திருப்பூரில் தங்கி இருந்த ராம்சிஷ் வர்மா பலருக்கும் உதவி இருக்கலாம் என போலிசார் கருதுகிறார்கள். அவனது பின்னணியில் யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட ராம்சிஷ் வர்மா. படம்: தமிழக ஊடகம்