சென்னை: திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தம் மீதான பாலியல் புகார்களை மறுத்து வரும் சுசி கணேசன் லீனா மீது கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில், சுசி கணேசனின் மனைவி மஞ்சரி தமது கணவருக்கு ஆதரவாக டுவிட்ட ரில் கூறுகையில், "நான் என் கணவர் பக்கம் நிற்கிறேன். லீனா மணிமேகலையின் அடிப்படையற்ற, கற்பனையான அவதூறுகளை நான் மறுக்கிறேன். திருமணமாகி 15 ஆண்டுகளில் ஒழுக்கமுள்ள நபராக எனது கணவர் இருக்கிறார். அவர் நல்ல கணவர்; அன்பான தந்தை. 'மீ டூ' பிரசாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். "ஆனால், லீனா போன்றோர் அதை சரியான ஆதாரங்கள் இன்றி தவறாகப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டம். "லீனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன். நாங்கள் பட்ட வேதனைகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். உண்மை ஜெயிக்கும்," என்று மஞ்சரி கூறி உள்ளார். படம்: ஃபேஸ்புக்
கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: பொங்கி எழுந்த பெண்
1 mins read
-

