உச்ச நீதிமன்றத்தில் முறையிட தேவசம் போர்டு திடீர் முடிவு

உச்ச நீதிமன்றத்தில் முறையிட தேவசம் போர்டு திடீர் முடிவு

1 mins read
da11211e-cc27-4db6-819a-a247ccb8d6bc
-

திருவனந்தபுரம்: சபரிமலை விவ காரத்தில் புதிய திருப்பமாக உச்ச நீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு திடீர் முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் ஐயப்பன் கோயி லுக்குள் இதுவரை பெண்கள் நுழைய முடியாததால் இந்த விவ காரத்தில் எந்த முடிவையும் எடுக்க தேவசம் போர்டுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து திருவாங்கூர் தேவசம்போர்டு தலைமையகத்தில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என முடிவு எடுக்கப் பட்டது.

இது பற்றி விவரம் தெரிவித்த தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார், "தேவசம் போர்டு தனது மரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது," என்றார். "எப்போது உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு செய்வது என்பது குறித்து டெல்லியில் உள்ள வழக் கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும். "நீதிமன்றத்தை நாட முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். பெண் களை அனுமதிப்பது தொடர்பாக சபரிமலையில் நடைபெற்ற நிகழ்வுகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்," என்றும் அவர் சொன்னார்.

சபரிமலைக்குச் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்பவர்களை கண்காணிக்கும் காவல்துறையினர். படம்: ஏஎஃப்பி