பிரதமர் வருகை; பெண் சமூக ஆர்வலர் கைது

பிரதமர் வருகை; பெண் சமூக ஆர்வலர் கைது

2 mins read
e08be61c-a4ff-4f2c-b0c8-d728d3c07d25
-

மும்பை: சபரிமலை விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் ஏன்று ‌ஷீரடிக்கு வரும் பிரதமரின் காரை வழிமறித்து விளக்கம் கேட்கப்போவதாகக் கூறிய பெண் சமூக ஆர்வலர் நேற்று கைது செய்யப்பட்டார். 'பூமாதா பிரிகேட்' என்ற அமைப்பின் தலைவரும் பெண் ஆர்வலருமான திருப்தி தேசாய், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச அனுமதிக்குமாறு அகமது நகர் மாவட்ட காவல்துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், அதற்குப் பதில் வராததால் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்து அவரிடம் சபரிமலை விவகாரம் பற்றி விளக்கம் கேட்பேன் என்று திருப்தி தேசாய் அறிவித்தார். இதனால் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்தி தேசாயை யும் அவரின் ஆதரவாளர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சாஹர் நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட திருப்தி தேசாய் 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டியில் "என்னை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு காவல்துறையினர் விளக்கம் அளிக்கவில்லை, "எங்களைக் கைது செய்வதற்குப் பதிலாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் போராட்டக்காரர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்திருக்கலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஏன் பெண்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்வது கடினமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். பெண் பக்தர்களை யும் பெண் பத்திரிகையாளர் களையும் ஆர்வலர்களையும் கோயிலுக்குள் வராமல் தடுத்துத் தாக்குதல் நடத்துவது பாஜக வினரே. "நான் சபரிமலைக் கோயிலுக் குள் செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு சபரிமலைக் கோயிலுக்குள் செல் வேன்," என்று திருப்தி தேசாய் சூளுரைத்துள்ளார்.

சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய முடியாததற்கு பாஜகவினரே காரணம் என்று சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கூறுகிறார். படம்: இந்திய ஊடகம்