இந்தியா: தசரா கொண்டாட்டத்தில் ரயில் மோதி 59 பேர் பலி

இந்தியா: தசரா கொண்டாட்டத்தில் ரயில் மோதி 59 பேர் பலி

2 mins read
8f9b2d42-aa38-438c-ade8-cedffe9e74be
-

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத் தலை நகர் அமிர்தசரசுக்கு அருகே தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட் டத்தினர் மீது ரயில் மோதியதில் 59 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இரவு 7.10 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தசரா பண்டிகையை ஒட்டி நேற்று முன்தினம் ராவண வதம் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், அமிர்தசரசில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலை விலுள்ள ஜோதா ஃபதக் எனுமிடத்தில் ராவணனின் உருவபொம்மையை எரிக் கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற படி பலர் அதைப் பார்த்துக்கொண்டும் தங்களது கைபேசிகளில் படம்பிடித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கிச் சென்றுகொண் டிருந்த ரயில் தண்டவாளத்தில் நின்றி ருந்தோர் மீது மோதியதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். உருவபொம்மை வெடித் துச் சிதறியதால் ஏற்பட்ட சத்தத்தில் ரயில் வரும் சத்தம் கேட்கவில்லை என அங்கிருந்த பலரும் தெரிவித்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் அறிந்து அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நீதி விசாரணை நடத்தி, நான்கு வாரங் களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.

ரயில் விபத்தில் மாண்ட கணவர் பல்பீர் சிங்கின் உடல் மீது விழுந்து புரண்டு கதறும் ஜஸ்பீர் கவுரைத் தேற்றும் உறவினர்கள். படம்: ஏஎஃப்பி