850 விவசாயிகளின் கடனை அடைக்கும் அமிதாப்

850 விவசாயிகளின் கடனை அடைக்கும் அமிதாப்

2 mins read
7735053b-51cb-4df3-9a11-fe157744d3c3
-

இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் நடிகர் அமிதாப் பச்சன் உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் 850 பேரின் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தவிருப்பதாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக மகாராஷ்டிர மாநி லத்தைச் சேர்ந்த 350 விவசாயி களின் கடன்களை அடைக்க உதவியதாகவும் தெரிவித்தார் 76 வயதான அமிதாப். "நமக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள சக இந்தியர்களுக்கு என்னாலான சிறு உதவியைச் செய்வது மிக்க மனநிறைவைத் தருகிறது.

நாட்டிற்காக உயிர்நீத்த 44 பேரின் குடும்பங்களுக்கும் மகாராஷ்டிரா வைச் சேர்ந்த 112 வசதிகுறைந்த குடும்பங்களுக்கும் உதவியுள் ளோம். நாட்டின் மற்ற பகுதிகளி லும் இதுபோல பல உதவிப் பணி களை மேற்கொள்ள வேண்டும். "கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்பட்ட 350 விவசாயிகளின் கடனைச் சில நாட்களுக்குமுன் அடைத்தேன். இதனால் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவிலிருந்து சிலரை அதிலிருந்து காப்பாற்ற முடிந்தது. முன்னதாக விதர்பா, ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி கள் சிலரின் கடனைத் திருப்பிச் செலுத்தவும் உதவினேன். இப் போது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 850 விவசாயிகள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். வங்கி களில் அவர்கள் பெற்றுள்ள ஐந்தரை கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை நான் ஏற்கிறேன்," என்று தமது வலைப்பக்கத்தில் திரு அமிதாப் பதிவிட்டுள்ளார்.

விளைச்சல் இல்லாததால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடும் விவசாயிகள் அதைத் தள்ளுபடி செய்யும்படி முறையிட்டும் அர சாங்கம் செவிசாய்க்காத நிலை யில், அமிதாப்பின் செயலை சமூக ஊடகவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.