ரூ.50 கோடி செலவிட்டால் வேட்பாளர்: திமுக உத்தியால் கட்சியில் கொந்தளிப்பு

1 mins read

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளையும்விட திமுக வேக மாக, முழுமூச்சாக ஆயத்தமாகி வருகிறது. எப்படி எப்படியெல்லாம் கூட் டணி அமைக்கலாம், எந்தெந்த கட்சிகளுக்கு இடம் கொடுக்கலாம், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை எப்படி உறுதிப்படுத்த லாம் முதலான பல அம்சங்கள் பற்றியும் பல தரப்பினரோடு அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக வட்டாரங்கள் குறிப்பிடு கின்றன. இந்த ஆலோசனைகளை ஒட்டி அண்மையில் சென்னை அறிவா லயத்தில் நடந்த திமுக செயல் திட்டக்குழு கூட்டத்தில் தெரிவிக் கப்பட்ட யோசனை, குழு உறுப் பினர்களைத் திடுக்கிட வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட விரும்பு வோர் ரூ.50 கோடி வரை செல விடவேண்டி இருக்கும் என்றும் அந்தத் தொகையில் ரூ. 5 கோடி வரைதான் கட்சி தரும் என்றும் எஞ்சிய தொகையை வேட்பாளரே செலவிடவேண்டியிருக்கும் என் றும் கட்சித் தலைவருக்கு மிகவும் அணுக்கமான முன்னாள் அமைச் சர் ஒருவர் அந்தக் கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்ததை அடுத்து குழு உறுப்பினர்களில் சிலர் கோபம் அடைந்துவிட்டதாக வும் தகவல்கள் வெளியாயின. இது பற்றி தங்களுடைய மனக் குறையை அந்த உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளிடம் தெரியப் படுத்தி இருக்கிறார்கள். .