39 லட்சம் இந்தியர்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்

39 லட்சம் இந்தியர்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்

2 mins read

இந்தியாவில் கடந்த 12 ஆண்டு களில் 39 லட்சம் மக்கள் அனாவ சியமாக தேவையின்றி மரணம் அடைந்துவிட்டார்கள் என்றும் அந்த மரணங்களைத் தவிர்த்து இருக்கலாம் என்றும் இந்திய அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரி விக்கின்றன. அமிர்தசரஸ் நகரில் சில நாட் களுக்கு முன் ரயில் மோதி 61 பேர் கொல்லப்பட்ட சம்பவம், அத் தகைய சம்பவங்களில் ஒன்று என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2004ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக் கும் இடையில் இத்தகைய சம் பவங்கள் மூலம் 39 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஆறு பேர் என்ற கணக்கில் அந்த 12 ஆண்டுகளில் ரயில் தண்ட வாளங்களில் மக்கள் மாண்டு விட்டனர்.

அசாதாரணமான விபத்துகள், சாலை விபத்துகள் மூலம் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். போக்குவரத்து விளக்குகள் போன்ற ஏற்பாடுகள் சரியில்லாமல் இருப்பதும் சட்ட அமலாக்கம் மோசமாக இருப்பதும் புரிந்துணர்வு இல் லாமல் இருப்பதும் இத்தகைய விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள் என்றார் ஒரு மூத்த போலிஸ் அதிகாரி. பருவநிலையும் இத்தகைய விபத்துகளுக்குச் சில நேரங் களில் காரணமாக அமைந்து விடுகிறது. இத்தகைய விபத்துகள் ஒருபுறம் இருக்க, வெடி விபத்துகள், வீடு உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழுவது, தொழிற்சாலை விபத்துகள், கட்டுமான இட விபத்துகளில் பலவற்றையும் தவிர்த்துவிடலாம். படகுகள் மூழ்கியதால் 12 ஆண்டு காலத்தில் 8,000 பேர் மாண்டு இருக்கிறார்கள். நீர்நிலைகளில் மூழ்கி 2015ல் சுமார் 30,000 பேர் மரணம் அடைந்தனர். இந்த எண்ணிக்கை 2004ல் 21,000 பேராக இருந்தது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.