சின்மயி: வழக்குத் தொடுப்பேன்

2 mins read
af1c72f0-c6cb-4aea-8d75-e7f1236f7fea
-

சென்னை: #MeToo விவகாரத்தில் எங்களைப் புரிந்துகொண்டு ஆண்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டுள்ளார் பாடகி சின்மயி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்விட்சர்லாந்தில் ஒரு கலைநிகழ்ச்சிக்குச் சென்றபோது கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது சின்மயியின் புகார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ள துடன், ஆதாரத்துடன் வழக்கு தொடருமாறு சவால் விடுத் துள்ளார். இதனைத் தொடர்ந்து சின்மயியைக் கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் கருத்து கள் பரவலாக வெளியாகின்றன. இந்நிலையில், லட்சுமி ராம கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, சின்மயி, லீனா மணிமேகலை உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, யாரிடம் எப்படி புகார் அளிப்பது என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. மும்பை, ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள திரைத்துறைப் பெண்கள் இதற்கான பணிகளை மேற்கொண் டுள்ளனர் என்று கூறினார்.

"உடனடியாக புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைக் கொடுத் துள்ளனர். இவ்வளவு நாட்களுக் குப் பிறகு இத்தனை பெண்கள் சொல்லி இருக்கிறார்கள். போகிற போக்கில் எல்லோரையும் அசிங்கப்படுத்த நாங்கள் இங்கே வரவில்லை. எங்களுக்கும் பாலி யல் துன்புறுத்தல் நடந்துள்ளது. "ஆண்டாள் சர்ச்சையில் என்னை வைத்து அரசியல் செய்யாதீர். ஒரு பாஜக அமைச்சர் மீதே பத்திரிகையாளர்கள் குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதில் இடது, வலது, மையம் என எல்லா அரசியல் கட்சி ஆண் களும் சிக்கியுள்ளனர். அனைத்து தரப்பினரின் பெயரும் இதில் அடிபட்டுள்ளது. எங்களுக்கு ஆதரவாக #MeToo இயக்கம் வந்துள்ளது.

"நான் சுவிட்சர்லாந்துக்குச் சென்ற தேதி, விவரங்கள் அடங் கிய கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்த வுடன் நிச்சயம் வழக்குத் தொடுப்பேன்," என்றார் சின்மயி. நடிகர் தியாகராஜனின் இயக்கத்தில் பொன்னர் - சங்கர் படம் தயாரிக்கப்பட்டபோது அதில் புகைப்படக் கலைஞராகப் பணி யாற்றிய இளம்பெண் ஒருவர், தமக்கு தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்தார் எனப் புகாரை வெளியிட்டுள்ளார். இதேபோல, நிபுணன் படப்பிடிப் பின்போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் படத்தின் நாயகி ஸ்ருதி ஹரிஹரன் #MeToo இயக்கம் வழியாகத் தெரிவித்தார். அந்தக் குற்றச்சாட்டை மறுத்த நடிகர் அர்ஜுன், ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கையெடுத்து கும்பிட்டு ஆண்களின் ஆதரவைக் கோரிய சின்மயி. படம்: ஊடகம்