தேனி: வைகை அணையில் நீர் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நேற்று முன்தினம் மாலையில் வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது. இதையடுத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இரண் டாம் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் நேற்றும் கனமழை பெய் தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 5 மணி நிலவரப்படி 69 அடியை எட்டியது.
அணைக்கு நேற்று 3,865 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங் களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் பெய்த தொடர்மழை காரணமாக அங்கு உள்ள வடமலைக்குறிச்சி கண்மாயின் கரை உடைந்ததில் அரசுப் பேருந்து பணிமனையில் தண்ணீர் புகுந்தது.

