தகுதிநீக்க எம்எல்ஏக்களுடன் தினகரன் திடீர் சந்திப்பு, போராட்டம் அறிவிப்பு

தகுதிநீக்க எம்எல்ஏக்களுடன் தினகரன் திடீர் சந்திப்பு, போராட்டம் அறிவிப்பு

1 mins read

சென்னை: தனது ஆதரவாளர்களுடன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேர்று திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ளன. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பரபரப்பான சூழலில் தகுதிநீக்க எம்எல்ஏக்களுடன் தினகரன் நடத்திய ஆலோசனையில் சில முன்னாள் அதிமுக உறுப்பினர்களும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது.

வழக்கின் தீர்ப்பு, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் ஆகியன பற்றி முக்கிய விவாதங்கள் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பேசிய திரு தினகரன், "எங்கள் ஆதரவாளர்களின் தொகுதிகளை எடப்பாடி அரசு புறக்கணிக்கிறது. அந்தத் தொகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். 90% அதிமுகவினர் எங்கள் பக்கம் உள்ளனர். கட்சியைக் கைப்பற்றுவதே எங்கள் நோக்கம்," என்று கூறியுள்ளார்.