ஜெயாவின் இறுதிச்சடங்குக்கு தமிழக அரசு செய்த செலவு ரூ.1 கோடி

ஜெயாவின் இறுதிச்சடங்குக்கு தமிழக அரசு செய்த செலவு ரூ.1 கோடி

1 mins read

சென்னை: ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குக்காகத் தமிழக அரசு ரூ.1 கோடி செலவு செய்துள்ளதாகத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் செய்தி பெறப்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான திரு சையது தமீம், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில் 5-12-2016 அன்று ஜெயலலிதா இறந்தார் என்றும் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்குக்கான செலவு தொடர்பான கேள்விக்கு, "தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக 99,33,586 ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.2